நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி: ஆதரவு அளித்த கட்சிகளுக்கும் தமிழக மக்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவு அளித்த கட்சித் தலைவர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
Joseph Vijay தலைமையிலான தவெக அரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆதரவு அளித்த கட்சித் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் முதல்வர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியதாவது:
“மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைத்துள்ள மக்கள் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்கள் நம்பிக்கை மூலம் அமைக்கப்பட்ட நமது அரசுக்கு ஆதரவு அளிக்கப்பட்டும் வாக்களிக்கப்பட்டும் நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றிக்குக் காரணமான, நம்மை ஆதரிக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், அக்கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே வேளையில், என்றும் நம்முடன் நிற்கும் நம் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நமது அன்பினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த வேளையில், தேர்தலில் நம்மை நம்பிய மக்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவிக்க வேண்டியது நமது கடமை. தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி.”
என்று முதல்வர் விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Prasanth Subramani