கோவையில் நடிகர் ராம் சரணுக்கு வெற்றிகரமான மணிக்கட்டு அறுவை சிகிச்சை – கங்கா மருத்துவமனைக்கு பாராட்டு
நடிகர் ராம் சரணுக்கு கோவையின் கங்கா மருத்துவமனையில் டாக்டர் எஸ். ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண், கோவையில் உள்ள பிரபல கங்கா மருத்துவமனையில் வெற்றிகரமாக சிக்கலான மணிக்கட்டு (Wrist) அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையை, எலும்பியல் துறையில் உலகப் புகழ்பெற்ற மருத்துவர் டாக்டர் எஸ். ராஜசேகரன் தலைமையிலான சிறப்பு மருத்துவக் குழு வெற்றிகரமாக மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், நடிகர் ராம் சரண் உடல்நலமாக இருப்பதாகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கோவையில் செயல்பட்டு வரும் கங்கா மருத்துவமனை, சிக்கலான எலும்பியல் மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைகளில் உலகத் தரமான மருத்துவ சேவையை வழங்கி வருவதால், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். நடிகர் ராம் சரணின் வெற்றிகரமான அறுவை சிகிச்சை, கோவையை உலகத் தர மருத்துவ மையமாக மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு, உலகத் தர சிகிச்சைகளை வழங்கும் கோவையின் மருத்துவத் திறனை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Prasanth Subramani