கோவையில் நவம்பர் 18-ல் இலங்கை வணிக வாய்ப்புகள் பயிலரங்கம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு

BizOnNet Solution சார்பில் நவம்பர் 18, 2026 அன்று கோவையில் இலங்கை வணிக வாய்ப்புகள் குறித்த பயிலரங்கம் நடைபெற உள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி, முதலீடு மற்றும் வணிகக் கூட்டாண்மை குறித்து தொழில்முனைவோர் அறிந்துகொள்ளலாம்.

கோவையில் நவம்பர் 18-ல் இலங்கை வணிக வாய்ப்புகள் பயிலரங்கம்! தமிழக தொழில்முனைவோருக்கு அழைப்பு

தமிழகத் தொழில்முனைவோருக்கு இலங்கையில் உள்ள வணிக வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், BizOnNet Solution நிறுவனம் சார்பில் ‘Sri Lanka Business Opportunities Workshop’ என்ற வணிகப் பயிலரங்கம் நவம்பர் 18, 2026 அன்று கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது. இந்தப் பயிலரங்கத்தின் மூலம் வணிக உரிமையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கைச் சந்தையில் உள்ள வர்த்தக வாய்ப்புகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். சர்வதேச வணிகத் தொடர்புகளை உருவாக்குதல், புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்துதல் மற்றும் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, வணிகக் கூட்டாண்மை, சந்தை வாய்ப்புகள், சில்லறை விற்பனை மற்றும் விநியோகம், முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இதில் கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்தப் பயிலரங்கம் நவம்பர் 18ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோயம்புத்தூர் ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள Cosmopolitan Club-ல் நடைபெறுகிறது. இலங்கையில் புதிய வணிக வாய்ப்புகளை ஆராயவும், சர்வதேச அளவில் தங்களது வணிகத் தொடர்புகளை விரிவுபடுத்தவும் விரும்பும் தமிழகத் தொழில்முனைவோருக்கு இந்த நிகழ்வு ஒரு தளமாக அமையும். இதில் பங்கேற்க விரும்புவோர் +91 90033 90911 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.