கோவையில் பேராசிரியர் E. பாலகுருசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! இன்று மாலை விருது வழங்கும் விழா
கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய பேராசிரியர் E. பாலகுருசாமிக்கு நவம்பர் 18ஆம் தேதி கோவையில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் கணினிக் கல்வியின் தந்தை எனப் போற்றப்படும் பேராசிரியர் E. பாலகுருசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, பொது நிர்வாகம் மற்றும் நாட்டின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
BizNet Solution நிறுவனம் சார்பில், 2026 டிசம்பர் 14 முதல் 20ஆம் தேதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வணிக மாநாட்டை (International Business Conclave – 2026) முன்னிட்டு இந்தச் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா இன்று (நவம்பர் 18, 2026) புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை கோவை காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க BizNet Solution நிறுவனத்தின் இயக்குநர் டத்துக் S. சுந்தர் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார். கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பேராசிரியர் E. பாலகுருசாமி ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. கோவையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Prasanth Subramani