கோவைக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்! 11.4 கி.மீ. சாலை வலம்; பெரியார் அறிவுலகம் திறப்பு

தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் இன்று அக்டோபர் 16-ம் தேதி கோவை வருகை தருகிறார். 11.4 கி.மீ. சாலை வலம் மேற்கொண்டு, காந்திபுரத்தில் பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைத்து அரசு விழாவில் பங்கேற்கிறார்.

கோவைக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்! 11.4 கி.மீ. சாலை வலம்; பெரியார் அறிவுலகம் திறப்பு

தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான சி. ஜோசப் விஜய் இன்று (அக்டோபர் 16) கோவை வருகை தருகிறார். காலை 11 மணியளவில் கோவை விமான நிலையத்தை வந்தடையும் அவர், அங்கிருந்து பீளமேடு மற்றும் அவிநாசி சாலை வழியாக காந்திபுரம் வரை சுமார் 11.4 கி.மீ. தொலைவுக்கு சாலை வலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தைத் திறந்து வைக்கிறார். இதையடுத்து நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையம், பீளமேடு, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.