பெண்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 2 முதல் விரிவாகும் ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கான ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்படுகிறது. Express, LSS, Deluxe, Mofussil Ordinary உள்ளிட்ட சேவைகள் உட்பட 12,692 அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும்.

பெண்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 2 முதல் விரிவாகும் ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டம்

பெண்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 2 முதல் விரிவாகும் ‘வெற்றிப் பயணம்’ இலவச பேருந்து திட்டம்

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சாதாரண நகர்ப்புற அரசு பேருந்துகளில் வழங்கப்பட்டு வரும் இலவசப் பயண வசதியுடன் கூடுதலாக, குறிப்பிட்ட அரசு பேருந்து சேவைகளும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. 

புதிய விரிவாக்கத்தின் கீழ் மாநகர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இயக்கப்படும் Express, LSS மற்றும் Deluxe அரசு பேருந்துகள், புறநகர் Ordinary பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் மலைப்பகுதி Ordinary பேருந்துகள் ஆகியவை திட்டத்தில் சேர்க்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயக்கும் மொத்தம் 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படுகின்றன. இது மொத்த பேருந்துகளில் சுமார் 69 சதவீதமாகும். 

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் தினசரி சுமார் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தின் கீழ் வரும் பேருந்துகளின் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இணைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் பணியிடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்குச் செல்வதற்கான பொதுப் போக்குவரத்து அணுகலை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. 

அமலுக்கு வரும் நாள்: அக்டோபர் 2, 2026
திட்டம்: ‘வெற்றிப் பயணம்’
பயனாளிகள்: பெண்கள்
திட்டத்தின் கீழ்: 12,692 அரசு பேருந்துகள்
தினசரி எதிர்பார்க்கப்படும் பயனாளிகள்: சுமார் 84.32 லட்சம் பெண்கள்