தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு – முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கை!

வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை இரண்டு வாரங்களில் மூட முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு – முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி நடவடிக்கை!

தமிழகத்தில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை மூடுமாறு தமிழக முதல்வர் Joseph Vijay அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து பட்டியலிடுமாறு முதல்வர் விஜய் முன்பே உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் நடத்தி வரும் மொத்த 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 717 கடைகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

இதில்,

  • வழிபாட்டுத்தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள்
  • கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள்
  • பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள்

என மொத்தம் 717 மதுபானக் கடைகள் அடங்கும்.

இந்த கடைகளை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூட நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழக அரசின் மதுக்கடை கொள்கையில் இது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.