தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம்: செப்டம்பர் மாத ஊதியம் முன்கூட்டியே வழங்க உத்தரவு
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25ஆம் தேதியே வழங்கப்பட உள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்று சம்பளம்: செப்டம்பர் மாத ஊதியம் முன்கூட்டியே வழங்க உத்தரவு!
செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளத்தை முன்கூட்டியே வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கான செப்டம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செப்டம்பர் 25, 2026 வெள்ளிக்கிழமை அன்றே வழங்கப்பட உள்ளது.
செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை ஆகியவை வார விடுமுறை நாட்களாக உள்ளன. இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 28 முதல் 30ஆம் தேதி வரை வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதால், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படக்கூடிய சிரமங்களைத் தவிர்க்க இந்த முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக அரசின் நிதித்துறை மற்றும் கருவூலக் கணக்குத் துறை சார்பில் சம்பளம் மற்றும் ஓய்வூதியப் பட்டியல்களை முன்கூட்டியே சமர்ப்பித்து, மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் வழக்கமான மாத இறுதி தேதிக்கு பதிலாக செப்டம்பர் 25ஆம் தேதியே கிடைக்கும். அதேபோல், மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் செப்டம்பர் மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்பட உள்ளது.
தொடர்ச்சியான விடுமுறை மற்றும் வங்கி வேலைநிறுத்தத்தால் ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பணப்பரிவர்த்தனைகளில் ஏற்படக்கூடிய தாமதத்தைத் தவிர்க்கும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
Dharshini