கொளத்தூரில் ஸ்டாலின் தோல்வி – 7,544 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தார். தவெக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் M. K. Stalin தோல்வியடைந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கொளத்தூர் தொகுதியில் தொடக்கம் முதலே பின்னடைவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து முன்னிலை பெற முடியாமல் இருந்தார்.
இதுவரை 16 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவைவிட 7,544 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மேலும், இன்னும் 6 சுற்றுகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அந்த வாக்குகளால் இந்த வித்தியாசத்தை குறைக்க முடியாத சூழல் இருப்பதால், ஸ்டாலின் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்ற ஸ்டாலின், நான்காவது முறையாக போட்டியிட்ட இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இது அவருக்கான இரண்டாவது தோல்வியாகும். முன்னதாக 1991ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Prasanth Subramani