உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026: குகேஷின் போராட்டம் டிராவில் முடிந்தது! சிந்தரோவுடன் முதல் ஆட்டம் சமநிலை

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவுடன் 38 நகர்வுகளுக்குப் பிறகு டிரா செய்தார். இருவருக்கும் தலா அரை புள்ளி கிடைத்தது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026: குகேஷின் போராட்டம் டிராவில் முடிந்தது! சிந்தரோவுடன் முதல் ஆட்டம் சமநிலை

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியன் டி. குகேஷ், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவுடன் டிரா செய்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற இந்தப் போட்டி 38 நகர்வுகளுக்குப் பிறகு சமநிலையில் முடிவடைந்தது. கருப்பு காய்களுடன் விளையாடிய குகேஷ், ஆட்டத்தின் நடுப்பகுதியில் கடுமையான நேர நெருக்கடியைச் சந்தித்தார். இருப்பினும், நிதானத்துடனும் சிறப்பான தற்காப்பு ஆட்டத்துடனும் விளையாடி சிந்தரோவின் சவாலைச் சமாளித்தார்.

இறுதியில் ஒரே செஸ் நிலை மூன்று முறை உருவானதால் விதிகளின்படி ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம் குகேஷ் மற்றும் சிந்தரோவ் இருவருக்கும் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டன. முதல் ஆட்டம் சமநிலையில் முடிந்துள்ள நிலையில், இரண்டாவது ஆட்டம் இன்று (நவம்பர் 25) நடைபெறுகிறது. இதில் குகேஷ் வெள்ளைக் காய்களுடன் விளையாட உள்ளார். இரண்டாவது ஆட்டத்தில் குகேஷ் வெற்றியைப் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு செஸ் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.