கோவையில் நள்ளிரவு 1 மணி வரை ஷாப்பிங்! நவம்பர் 7 வரை கடைகள் திறக்க அனுமதி?
தீபாவளியை முன்னிட்டு கோவையில் நவம்பர் 7ஆம் தேதி வரை கடைகளை நள்ளிரவு 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய வணிகப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூடுதல் நேரம் ஷாப்பிங் செய்வதற்கு ஏதுவாக, நவம்பர் 7ஆம் தேதி வரை கடைகளை நள்ளிரவு 1 மணி வரை திறந்து வைத்திருக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் தீபாவளிக்குத் தேவையான புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மக்களுக்கு கூடுதல் நேரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம், கிராஸ்கட் சாலை உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
Prasanth Subramani