அக்ஸர் – மில்லர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை காப்பாற்றிய டெல்லி!

ஐபிஎல் 2026 தொடரின் 55-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், பஞ்சாப் கிங்ஸை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை தக்க வைத்தது.

அக்ஸர் – மில்லர் அதிரடி: பஞ்சாப்பை வீழ்த்தி பிளேஆஃப் நம்பிக்கையை காப்பாற்றிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் 55-வது ஆட்டத்தில் Delhi Capitals அணி, Punjab Kings அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வீழ்த்தியது.

தோல்வியடைந்தால் தொடரிலிருந்து வெளியேறும் நிலை இருந்த நிலையில், டெல்லி கடைசி நேரத்தில் வெற்றியைப் பதிவு செய்து பிளேஆஃப் நம்பிக்கையை தக்க வைத்தது. மறுபுறம், ஒரு கட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப், தற்போது தொடர்ந்து 4-வது தோல்வியைச் சந்தித்து பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பிரியன்ஷ் ஆர்யா 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்தார்.

கேப்டன் Shreyas Iyer மற்றும் கூப்பர் கானலி இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 83 ரன்கள் சேர்த்து அணியை பலப்படுத்தினர். கானலி 38 ரன்களுக்கு வெளியேற, மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் சஷாங்க் சிங் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் ஷ்ரேயஸ் ஐயர் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களும், சூர்யன்ஷ் ஷெட்கே 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 210 ரன்களை எடுத்தது.

டெல்லி தரப்பில் மாதவ் திவாரி மற்றும் Mitchell Starc தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

211 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அபிஷேக் பொரெல், KL Rahul, சஹில் பாரக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் விரைவில் வெளியேறியதால் 74 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி தடுமாறியது.

அப்போது கேப்டன் Axar Patel மற்றும் David Miller இணைந்து அணியை மீட்டனர். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்தனர்.

அக்ஸர் படேல் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களும், மில்லர் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 51 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஆசுதோஷ் சர்மா 24 ரன்கள் சேர்த்த நிலையில், மாதவ் திவாரி மற்றும் ஆகிப் நபி அணியை வெற்றிக்குக் கொண்டு சென்றனர்.

பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் யஷ் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.