ரிக்கெல்டன்–ரோஹித் அதிரடி: 229 ரன்கள் சேஸ் செய்து மும்பை வெற்றி

ஐபிஎல் 2026 போட்டியில் லக்னோ 228 ரன்கள் எடுத்தும், மும்பை அணி 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரிக்கெல்டன்–ரோஹித் அதிரடி: 229 ரன்கள் சேஸ் செய்து மும்பை வெற்றி

ஐபிஎல் 2026 தொடரின் 47-ஆவது போட்டியில், மும்பை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. நிகோலஸ் பூரன் 63 ரன்களும், மிட்செல் மார்ஷ் 44 ரன்களும் சேர்த்து அணிக்கு வலுவான ஸ்கோரை வழங்கினர். எய்டன் மார்க்ரம் மற்றும் ஹிம்மத் சிங் கடைசியில் ரன்களை அதிகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து 229 ரன்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. ரயான் ரிக்கெல்டன் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றனர்.

ரிக்கெல்டன் 83 ரன்களும், ரோஹித் சர்மா 84 ரன்களும் எடுத்து முக்கிய பங்காற்றினர். தொடர்ந்து வந்த வீரர்கள் விரைவில் அவுட்டானாலும், இறுதியில் நமன் திா் மற்றும் வில் ஜாக்ஸ் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

மும்பை அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 3 தோல்விகளுக்குப் பிறகு மும்பை அணி மீண்டுள்ளது. மறுபுறம், லக்னோ அணி தொடர்ந்து 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.