தமிழக அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் விடுப்பு – முதல்வர் விஜய் அறிவிப்பு,

தமிழக அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு வழங்கப்படும் என முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். விடுப்பைப் பயன்படுத்தும் கால அவகாசம் குறித்த விவரங்கள்.

தமிழக அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் விடுப்பு – முதல்வர் விஜய் அறிவிப்பு,

தமிழக அரசு ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்கள் தந்தையர் விடுப்பு – முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள திருமணமான ஆண் ஊழியர்களுக்கு முதன்முறையாக 15 நாட்கள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு (Paternity Leave) வழங்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். மனைவியின் மகப்பேறு காலத்தில் அவருக்குத் துணையாக இருப்பதுடன், பிறந்த குழந்தையைப் பராமரிப்பதிலும் தந்தையின் பங்களிப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த 15 நாட்கள் விடுப்பை குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பிருந்தோ அல்லது குழந்தை பிறந்த தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள்ளாகவோ எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களிடமிருந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.