கோல் இந்தியா நிறுவனத்தில் 1055 காலிப்பணியிடங்கள் – டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு
தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் Mining Sirdar, Deputy Surveyor, Assistant Foreman உள்ளிட்ட 1055 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Coal India Limited நிறுவனத்தின் துணை நிறுவனமான South Eastern Coalfields Limited (SECL) நிறுவனத்தில் காலியாக உள்ள 1055 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: SECL/HR/MP/Recruitment/2026/166
???? பணியிட விவரங்கள்:
1. Mining Sirdar T&S - Grade C
- காலியிடங்கள்: 577
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Mining பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் Mining Sirdarship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Deputy Surveyor T&C - Grade C (Mining)
- காலியிடங்கள்: 43
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Mining அல்லது Mine Surveying பிரிவில் ITI அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். Surveyor சான்றிதழ் அவசியம்.
3. Assistant Foreman (Electrical) - Grade C
- காலியிடங்கள்: 435
- தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Electrical Engineering பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
???? சம்பளம்:
தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.47,330 வரை சம்பளம் வழங்கப்படும்.
???? வயது வரம்பு:
08.04.2026 தேதியின்படி 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
???? தேர்வு முறை:
கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
???? கூடுதல் நிபந்தனைகள்:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் அசல் சான்றிதழ்களுடன், தற்போது செல்லுபடியாகும் Gas Testing Certificate மற்றும் First Aid Certificate வைத்திருக்க வேண்டும்.
???? விண்ணப்பக் கட்டணம்:
- பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள்: ரூ.1,180
- எஸ்சி / எஸ்டி / மாற்றுத்திறனாளிகள் / பெண்கள்: கட்டணம் இல்லை
???? விண்ணப்பிக்கும் முறை:
SECL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
???? கடைசி தேதி:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.05.2026
Prasanth Subramani