டிரம்பின் 10% வரி சட்டவிரோதம் – அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக நாடுகள் மீது டொனால்ட் டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 10 சதவிகித வரி சட்டவிரோதமானது என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவின் வருவாயை அதிகரிப்பதற்கும், சர்வதேச வர்த்தக பேச்சுவார்த்தைகளில் அழுத்தம் கொடுப்பதற்கும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் வரி விதிப்பதை டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
இதற்கு முன்பு, உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரத்து செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பொருட்களுக்கு மீண்டும் 10 சதவிகித வரியை டிரம்ப் அரசு அறிவித்தது.
இந்த நிலையில், டிரம்ப் விதித்த புதிய வரிகளும் சட்டவிரோதமானவை என அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் அமெரிக்காவின் அணுகுமுறைக்கு எதிரான முக்கிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் சர்வதேச வர்த்தக உறவுகளில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Prasanth Subramani