அண்ணா பல்கலைக்கழகத்தில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் வேலைவாய்ப்பு அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் காலியாக உள்ள புராஜெக்ட் அசிஸ்ட்டென்ட் பணிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் பணிக்கான காலியிடம் ஒன்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது எம்இ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் தொடர்பான தகவல்கள் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. P. Somasundaram
Professor,
Department of Electrical and Electronics Engineering,
College of Engineering Guindy,
Anna University,
Chennai – 600025.
மின்னஞ்சல் முகவரி:
mpsomasundaram@annauniv.edu
somuau77@gmail.com
மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 11.05.2026
Prasanth Subramani