சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் – வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட தகவலில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கோவை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல் முதல் தென்மேற்கு மத்திய பிரதேசம் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவி வருகிறது. இந்த பாதை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக நீள்கிறது.

அதேபோல், சுமார் 1.5 கிலோமீட்டர் உயரத்தில் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் நிலவி வருகிறது.

இதன் காரணமாக, தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.