மேற்கு வங்க தேர்தல் சர்ச்சை: பாஜக மீது மமதா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்துள்ளதாக மமதா பானர்ஜி குற்றஞ்சாட்டினார். தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் சர்ச்சை: பாஜக மீது மமதா பானர்ஜி கடும் குற்றச்சாட்டு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து பெரிய அரசியல் சர்ச்சை உருவாகியுள்ளது. மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் (TMC), பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இந்த தேர்தலில் பாஜக 207 தொகுதிகளில் வெற்றி பெற்று, மேற்கு வங்கத்தில் முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது. அதேசமயம், திரிணமூல் காங்கிரஸ் 80 தொகுதிகள், இந்திய தேசிய காங்கிரஸ் 2 தொகுதிகள் மற்றும் பிற கட்சிகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து, மமதா பானர்ஜி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “100க்கும் மேற்பட்ட தொகுதிகள் எங்களிடமிருந்து பாஜக திருடியுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 90 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

மேலும், தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என்றும், பாஜகக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். “மக்களின் வாக்குரிமையை பறிக்கவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தவும் தேர்தல் ஆணையம் உதவியது” என்று அவர் தெரிவித்தார்.

அத்துடன், வாக்களித்த பின்னரும் EVM இயந்திரங்களில் 80–90% மின்சாரம் இருப்பது குறித்து அவர் சந்தேகம் எழுப்பினார். தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சியினரை கைது செய்தது, அதிகாரிகளை மாற்றியது போன்ற நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.