டெல்லி அதிரடி வெற்றி: 226 இலக்கை சாய்த்த ராஜஸ்தான் வீழ்ச்சி

ஐபிஎல் 2026 போட்டியில் டெல்லி அணி 226 ரன்கள் இலக்கை துரத்தி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது.

டெல்லி அதிரடி வெற்றி: 226 இலக்கை சாய்த்த ராஜஸ்தான் வீழ்ச்சி

ஐபிஎல் 2026 தொடரின் 43-ஆவது போட்டியில், டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த டெல்லி அணி, இந்த வெற்றியின் மூலம் மீண்டுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி விரைவில் அவுட்டானனர்.

இதையடுத்து துருவ் ஜுரெல் மற்றும் கேப்டன் ரியான் பராக் இணைந்து 102 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டனர். ஜுரெல் 42 ரன்கள் எடுத்தார். ரியான் பராக் அதிரடியாக விளையாடி 90 ரன்கள் எடுத்து அணிக்கு பெரிய ஸ்கோர் வழங்கினார்.

இறுதிக்கட்டத்தில் டோனோவன் ஃபெரெய்ரா 47 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

டெல்லி அணியின் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் 226 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. பதும் நிசங்கா மற்றும் கே.எல். ராகுல் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தனர்.

நிசங்கா 62 ரன்களும், ராகுல் 75 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து நிதீஷ் ராணா 33 ரன்கள் சேர்த்தார்.

இறுதியில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஆசுதோஷ் சர்மா இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முழுவதும் அதிக ரன்கள் குவிந்த பரபரப்பான ஆட்டமாக அமைந்தது.